முகப்பு /செய்தி /கல்வி / தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு ஒத்திவைப்பு

தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு ஒத்திவைப்பு

தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு

தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு

பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அக்டோபர் 1ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இந்த தகுதித் தேர்வுக்கு, தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம் என்றும், இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 9ம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கசிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு

இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகசாத்தை பயன்படுத்தி தேர்வுக்கு தயராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: Department of School Education, Govt School, School education department