தமிழ் மொழித் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வரும் அக்டோபர் மாதம் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள் 1.10.2022 அன்று நடைபெறவுள்ள இந்த திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
முன்னதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது" என்று தெரிவித்தது.
தேர்வின் தன்மை:
தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.
வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படும் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளியின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: வேலூரில் அக்னிபத் ஆள்சேர்ப்பு முகாம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இத்தேர்விற்கான விண்ணப்பபங்களை dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ/50- சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். 09.09.2022 தேதிக்கும் விண்ணப்பபங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.