Home /News /education /

Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

Summer Holidays | கொரோனா கால கட்டத்தில் தாமதமாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    உயர்படிப்பு பட்டயம், பட்ட படிப்பு படிக்க செல்லும் மாணவிகளுக்கு , மாத மாதம் ரூ.1000 அவர்களது கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் அதிகப்படியாக மாணவிகள் கல்வி கற்பதோடு அரசு பள்ளியில் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக முதல்வர் பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்படிப்பு பட்டயம், பட்ட படிப்பு படிக்க செல்லும் போது, மாத மாதம் ரூ.1000 அவர்களது கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் அதிகப்படியாக மாணவிகள் கல்வி கற்பதோடு அரசு பள்ளியில் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    Also Read:  2774 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை

    இப்போதைக்கு அரசு பள்ளிக்கு மட்டும் தான் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.கொரோனா கால கட்டத்தில் தாமதமாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு பாடதிட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்.

    பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். முதற்கட்டமாக இந்தாண்டு ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். குறைந்தபட்சமாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் பள்ளிகழிப்பறைகள், ஆய்வு கூடம், பள்ளி வளாகத்தில் என்னென்ற தேவையோ அத்தனை கட்டிடங்களும் கட்டப்படும்.

    Also Read:  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் நேர்முக தேர்வை தவறவிட்ட இளைஞர்

    கடந்த மாதம் சேலத்தில் நடந்த மண்டல ஆய்வின் போது மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கையேடுகள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய 44 பகுதிகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1100 ஆசிரியர்களுக்கு, எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகள் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையெடுகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

    செய்தியாளர்:  முரளி கணேஷ் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Education, Minister Anbil Mahesh, School Holiday, Summer, Tamil News

    அடுத்த செய்தி