Home /News /education /

அன்புள்ள சத்யா மிஸ்சுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... மாணவி எழுதிய பாச கடிதத்தை பகிர்ந்த பள்ளிக்கல்வி துறை

அன்புள்ள சத்யா மிஸ்சுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... மாணவி எழுதிய பாச கடிதத்தை பகிர்ந்த பள்ளிக்கல்வி துறை

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி, என் உள்ளம் தேடி வந்த கல்வியாக மாற்றிய என் அன்பு சத்யா மிஸ்க்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    Illam thedi kalvi Inspirational Letter: கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, மாநிலம் முழுவதும் இல்லம் தேடி கல்வி இயக்க மையங்கள் அமைக்கப்பட்டு, பள்ளிக்குப் பிந்தைய மாலை  நேரங்களில் கற்பித்தல்  நடைபெற்று வருகிறது. 

    தங்களது நேரத்தை குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வவலர்கள் இத்திட்டத்தின் கீழ் கற்பித்தல் தொண்டு செய்து வருகின்றனர். நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழும் இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

    சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்தும் படித்த பெண்கள், தாமாக முன்வந்து ஆர்வத்துடன்  கற்பிப்பதால், குறுகிய அதிகார கட்டமைப்புக்குள் இருந்த மாணவர் - ஆசிரியர் என்ற இருதரப்பு உறவுமுறை தற்போது எல்லையற்ற, பரந்துபட்ட அளவில் விரிவடைந்து வருவதாக சமூக சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     



     

    மாணவர்கள் மத்தியில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தனது ட்விட்டரில், " 8ம் வகுப்பு மாணவி ஓவிய எழுதிய கடிதத்தை  பதிவிட்டிருந்ததது. தனக்கு மாலை நேரங்களில் கற்ப்பிக்கும்  தன்னார்வலர் சத்யா என்பவருக்கு எழுதிய அக்கடிதத்தில், 

    என் அன்புள்ள சத்யா மிஸ்சுக்கு கடிதம்,

    எனக்கு  மிஸ் ரெம்ப பிடிக்கும்
    எனக்கு மிஸ்கிட்ட ரெம்பா பிடிப்பது அன்பு
    எனக்கு ஆங்கிலம் சொல்லி தருவங்க
    மிஸ் அன்பா பேசுவாங்க, மிஸ் எல்லோருக்கும்
    நிறைய game சொல்லி தருவாங்க, கதை புத்தகம்
    படிக்க கற்றுக் குடுத்திருங்க. maths சொல்லி தருவாங்க மிஸ்.
    எல்லாருக்கிட்டையும் அன்பா பாசமாய் பேசுவாங்க
    இல்லம் தேடி கல்வி, என் உள்ளம் தேடி வந்த கல்வியாக மாற்றிய என் அன்பு சத்யா மிஸ்க்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
    நான் போட்டியிலும், படிப்பிலும் நிறைய பரிசுகளை பெற்றேன், பரிசுகள் வழங்கி பாராட்டிய உங்களுக்கு நன்றி "

    என்று எழுதியிருந்தார். இந்த கடிதம் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

     
    Published by:Salanraj R
    First published:

    Tags: Illam Thedi Kalvi

    அடுத்த செய்தி