Home /News /education /

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களின் பயிற்சி கட்டணம் ரத்து - அமைச்சர் மா.சுப்ரமணியன்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களின் பயிற்சி கட்டணம் ரத்து - அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசின் இந்த அறிவிப்பு உக்ரைன், சீனா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஆயிரகணக்கான மருத்துவ மாணவர்களுக்கு பலனளிக்கும் என்று அறியப்படுகிறது. 

    அயல்நாட்டு மருத்துவ தணிக்கை பரிசோதனை தேர்வில் (Foreign Medical Graduates Exam)  தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான ஈராண்டு (Compulsory Rotating Medical Internship) பயிற்சி காலத் திட்டத்திற்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அரசின் இந்த அறிவிப்பு உக்ரைன், சீனா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஆயிரகணக்கான மருத்துவ மாணவர்களுக்கு பலனளிக்கும் என்று அறியப்படுகிறது.

    முன்னதாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,"நாகர்கோவிலில் நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய அவர், " வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் அயல்நாட்டு மருத்துவ தணிக்கை பரிசோதனை தேர்ச்சிப் பெற வேண்டும். மேலும், இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய,மருத்துவ கல்லூரிகளில் இரண்டு ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி (Compulsory Rotating Medical Internship) மேற்கொள்ள வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சம் பயிற்சி கட்டணமும், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.3.20 கட்டணமும்  செலுத்த வேண்டியிருக்கும்.

    கடந்த பிப்ரவரி மாதம், தடையின்மை சான்றிதலுக்கான கட்டணத்தை 3.20 லட்சம் ரூபாயிலிருந்து  30,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. தற்போது, மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிக் கட்டணத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுளளது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: கலை அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும்

    இதற்கிடையே, ரஷ்யா படையெடுப்பால் இந்தியாவுக்கு திரும்பி, அதன் பின் மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற மாணவர்கள், FMGE தணிக்கைத் தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தது. மேலும், ஒரு முறை வாய்ப்பாக, இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கு Compulsory Rotating Medical Internship என்ற இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Medical colleges

    அடுத்த செய்தி