அரசுப்பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையால் புதிதாக 10,300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சேலம் வந்திருந்தார். பின்னர் அவர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும் போது, ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தேவையான நிதி ஒதுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
இதுபோல் தமிழகம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்கள் இடித்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும், தமிழகத்தில் 10 ஆயிரத்து 31 பள்ளிகள் பழுதடைந்துள்ளது. இவைகள் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கு 1300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், "கள்ளக்குறிச்சி பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் 81% மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளனர். அவர்களின் நேரடி வகுப்புக்காக பள்ளி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நேரடி வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி பள்ளிகள் படித்த மாணவ மாணவிகள் மாற்றுப் பள்ளியில் படிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 907 பேர் விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இதை ஆய்வு செய்ய தனியாக DEO நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: 50,000 பள்ளி ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனநலம் மற்றும் உடல் நலம் வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மருத்துவர்கள் மாணவ மாணவிகளை சந்திப்பார்கள். இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாணவ மாணவிகளுக்கு பள்ளி விடுமுறை மிகவும் அவசியமானது.
அப்போது தான் அவர்கள் அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். இதனால் தனியார் பள்ளி நிர்வாகம் விடுமுறை நாட்களில் மாணவ மாணவிகளை அழைத்து வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தகர்.
இதையும் வாசிக்க: கலை அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும்
பள்ளிகளில் குழந்தைகளுக்கான திரைப்படம் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், " நமது பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களுக்கு கட்டு தரவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது. பள்ளிகளில் தற்போது மாணவ மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தேவை பூர்த்தி செய்ய நடப்பாண்டில் 10,300 ஆசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.