Home /News /education /

அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக புகழ்ப்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் அதனுமதிக்கப்பட்ட 2420 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை  வெறும் 36 ஆகவும், 2020ல் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 20 ஆகவும் குறைந்திருக்கிறது.  

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பு என்ற ரீதியில் மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதி நுழைவுத்  தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. நீட் தேர்வு தொடர்பான பாதிப்புக்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே ராஜன்  தலைமையிலான குழுவும் இதன் தாக்கங்களை எடுத்துரைத்தன.

இதற்கிடையே, பொறியியல், வேளாண்மை, சட்டம்  போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சந்திக்கும்  பிரச்சனைகளை குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆணையம் அமைத்தது.

இந்த ஆணையம்,  அரசுக் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள்/ சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10%க்கும் குறையாமல்  முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற பரிந்துரைத்தது. ஆனால், தமிழக அரசு 7.5% இடங்கள் மட்டும் ஒதுக்கி சட்டமியற்றியது.

நீட் தேர்வின் ஏ.கே. ராஜன் ஆணையத்தின் அறிக்கை பேசப்பட்ட/  கொண்டாடப்பட/விமர்சிக்கப்பட்ட அளவில் நீதிபதி முருகேசன் ஆணையத்தின் அறிக்கை பேசப்படவில்லை. உண்மையில், இந்த அறிக்கை பொதுத் தளத்தில் இருப்பதாக தெரியவில்லை. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கை பெறப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்தும்,  அவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், சரிசெய்ய வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும்விரிவான முறையில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை என்ன? 

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வை முடிக்கின்றனர். மொத்தமுள்ள 7968 உயர்நிலைப் பள்ளிகளில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மட்டுமே 3054 ஆக உள்ளது. இருப்பினும், தொழில்நுட்பக் கல்வியில் இம்மாணவர்களின் எண்ணிக்கை  மிகக் குறைவானதாகவே உள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை :  

தமிழ்நாட்டில், தொழிநுட்ப படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கடந்த 2007ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால், கிராமப்புற அரசுப் பள்ளி  மாணவர்கள் பெரிதும் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொறியியல் படிப்புகளில் சமூகம்  மற்றும் பொருளாதார மிக்கோர் தொடர்ந்து  வாய்ப்புகளை பெற்று வருவதை ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.      

 

உதாரணமாக, 2019-20 கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விதம் வெறும் 5.59% ஆக மட்டுமே உள்ளது. அதவாது, அனுமதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் (226385) அதிகமான இடங்களில் வெறும் 12,659 அரசுப் பள்ளி  மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 2020ல் இந்த எண்ணிக்கை 6.14% ஆக சற்று அதிகரித்துள்ளது.

Also Read : நீட் தேர்வில் தன்னிறைவு அடையும் வரை பயிற்சி வகுப்புகள் தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அதே போன்று, 2019-20கல்வியாண்டில்  பிஎஸ்ஜி போன்ற அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை  வெறும் 26 ஆக உள்ளது. 2020ல் இந்த எண்ணிக்கை 13 ஆக சரிந்துள்ளது.

உலக புகழ்ப்பெற்ற அண்ணா பல்கலைக்கழக  வளாகத்தில், 2019ல்    அனுமதிக்கப்பட்ட 2420 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை  வெறும் 36 ஆகவும், 2020ல் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 20 ஆகவும் குறைந்திருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழிநுட்ப கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் நலிவடைந்த மாணவர்கள்  தம்மீது பதிவு செய்யப்பட்ட ஒடுக்குமுறையை உடைத்து எரிவதற்கும், தவிர்க்க முடியாத  சக்தியாக உயர்வதற்கு, சமூக முரண்பாடுகளை கலைவதற்கும், உலகை மாற்றியமைக்கும் வல்லமையை பெற்றிடவதற்கும் தொழிநுட்பக் கல்வி  முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆனால், இந்த தரவுகள், தொழிநுட்ப படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு முழுமையாக பங்கு பெற முடியாமல், அந்நியமாகியுள்ளனர் என்பதனை தெளிவுபடுத்துகிறது.

தமிழகத்தில், தொடக்க  கல்வி மாணவர்களில் 43.5% பேரும் , 14 வயதுகுட்பட்ட மாணவர்களில்  57.5% பேரும்,  10 வகுப்பு வரையிலான  உயர்நிலை மாணவர்களில் 61.9% பேரும், 12ம் வகுப்பு வரையிலான மேல் உயர்நிலை  மாணவர்களில் 61.7% பேரும் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அதாவது, தொடக்க கல்விக்குப் பிறகு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீதான சார்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.

குறிப்பாக, இந்த சார்பு தன்மை  ஆதிதிராவிட,  பழங்குடியின மாணவர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக, 8,10,12ம் வகுப்புகளில் ஆதிதிராவிடர் மாணவர்களில் 70% க்கும் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் படித்து வருவதாகவும்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 50%க்கும் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் பயின்று வருவதாகவும் ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது.

முதல் தலைமுறை பட்டதாரி:  அதே போன்று, 2019-20 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கை 2.41% ஆக உள்ளது. 2020ல் இந்த எண்ணிக்கை 3.22% ஆக சற்று அதிகரித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த எண்ணிக்கை 2019ல் 3 ஆகவும், 2020ல் 6 ஆகவும் உள்ளது.



மேற்படி படத்தில், தமிழகத்தில் கல்வி பெறாத பெற்றோர்களில் 75.23% பேர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்  படிக்க வைக்கின்றனர். அதே சமயம், வெறும் 15.36 % பெற்றோர் மட்டுமே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

மறுபுறம், பட்டப்படிப்பு முடித்த பெற்றோர்களில்  57.46% தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துவருகின்றனர். 17% பட்டதாரிகள் மட்டுமே தங்கள் குழந்தைகளை  அரசுப் பள்ளியில் படித்து வைக்கின்றனர்.

Also Read : உயர்கல்வி படிப்பு: கல்விக்கடன் பற்றித் தெரிந்து கொள்வோம்

நான்கைந்து தலைமுறைகளாக கல்வியறிவு பெற்ற மக்கள், தங்களது வளங்களையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல பள்ளிக் கூடங்களை போன்ற சமூக அமைப்புகளை  பெரிதும் பயன்படுத்துகின்றன. ஆனால், படிப்பறிவு இல்லாத மக்களுக்கு அத்தகைய கலாச்சார மூலதனங்கள் இல்லாததால் எந்தவொரு அநூகூலங்களைப் பெற முடிவதில்லை என்பதை மேற்படி தரவுகள் மெய்ப்பிக்கின்றன.

நீதியரசர் முருகேசன் ஆணையம் எழுப்பும் விவாதங்கள் என்ன ?  

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள், "  பொதுவாக, ஒரு நாட்டின் பாடசாலைகள் அதன் சமூகத்தைப் பிரதிபலித்து நிற்கின்றன. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒளிவுமறைவின்றி  வெளிப்படையாக நியாயப்படுத்தும்  அங்கீகரிக்கும் அமைப்பாக பாடசாலைகள் இருந்து விடக் கூடாது என்பதனை பல்வேறு சிந்தனையாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

7.5% இடஒதுக்கீடு உடனடித் தீர்வாக இருந்தாலும், மேல்நிலை ஆசிரியர்களுக்கு  பயிற்சி அளித்தல், 11,12ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல், கல்வி தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் பயன்படுத்துதல் போன்ற ஆணையத்தின் மற்ற பரிந்துரைகளிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும்  தெரிவிக்கின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Department of School Education, Education

அடுத்த செய்தி