ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்(Tentative Answer Keys) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய தேர்வர்கள், தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த, உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் இன்று (22.02.2023) பிற்பகல் முதல் 25ம் தேதி பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.
இதையும் வாசிக்க: SSC CGL 2022 Tier1 ScoreCard: எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் செக் செய்வது எப்படி?
அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் (Standard Text Books) மட்டுமே ஆதாரமாக அளிக்க வேண்டும் என்றும் கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளும், trb.tn.nic.in ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNTET