2022 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த திரிதேவ் விநாயகா என்ற மாணவன்705 மதிப்பெண்களுடன் மாநிலளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மாணவன் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்களுடன், தரவரிசைப் பட்டியலில் 99.9976198 மதிப்பெண் விழுக்காடு(per centile) பெற்று 30 இடத்தை தக்கவைத்துள்ளார். அதேபோன்று, மாணவி எம்.ஹரிணி 702 மதிப்பெண்களுடன், தரவரிசைப் பட்டியலில் 99.9975632 மதிப்பெண் விழுக்காடு பெற்று 43வது இடத்தில் உள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள்:
2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வில், மொத்தம் 17, 645,71 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 51.288 ஆகும். இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (54%) குறைவானதாகவும்.
மாநில தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தைப் பொறுத்த வரையில், மொத்தம் 1,32, 167 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 67,789 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 51.2 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (57.4%) இந்த எண்ணிக்கை குறைவானதாகவும். இந்தாண்டு, தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 31965 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். 2029,2020,2021 ஆகிய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை முறையே 1017, 17101,19868 ஆக உள்ளன.
தேசிய அளவில் வகுப்பு வாரியான தேர்ச்சி விகிதம்:
இந்தாண்டு,மொத்தம் 7,50, 871 ஓபிசி வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 4,47, 753 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்தாண்டு 59.4% ஆக இருந்த தேர்ச்சி விகிதம், தற்போது 59.6% ஆக சற்று அதிகரித்துள்ளது.
2,52,054 பட்டியல் கண்ட சாதி பிரிவு மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 1,31,767 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்தாண்டு 51% ஆக இருந்த தேர்ச்சி விகிதம், இந்தாண்டு 52.2% ஆக சற்று அதிகரித்துள்ளது. .
பட்டியல் பழங் குடியினர் பிரிவில், 103397மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 47,295 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.கடந்தாண்டு 42.8% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 45.5% ஆக சற்று அதிகரித்துள்ளது.
பொதுப் பட்டியலில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரில் (General - EWS), 1,28, 320 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 84,070 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 65.5% ஆகும். கடந்தண்டு 65.3% ஆகும்.
இதையும் வாசிக்க: Neet: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதலிடம்
முதல் 50 இடங்கள்: இடஒதுக்கீடு பிரிவு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்திருந்தாலும், முதல் 50 இடங்களுக்கான மாணவர்கள் பட்டியலில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரில் ஒரு மாணவரும், ஓபிசி வகுப்பினரில் 6 மாணவர்களும் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
முதல் 50 இடங்களில், பட்டியல் கண்ட சாதி/பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, NEET Result