முகப்பு /செய்தி /கல்வி / 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம் என்ன?

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம் என்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 12,714 பள்ளிகளில், 4006 பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 886 ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்கத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் பற்றிய விவரங்களை இன்று காலைகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில், 90.07  சதவிதத்துனர் தேர்ச்சியும், 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில், 93.76 சதவீதத்தினர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு பள்ளிகள்  வாரியான தேர்ச்சி விகிதம்:   

7499 மேல்நிலைப் பள்ளிகளில், 2628 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 246 ஆகும்.

அரசுப் பள்ளிகள்89.06%
அரசு உதவி பெறும் பள்ளிகள்94.87%
தனியார் சுயநிதி பள்ளிகள்99.15%
இருபாலர் பள்ளிகள்94.05%
பெண்கள் பள்ளிகள்96.37%
ஆண்கள் பள்ளிகள்86.60%

கடந்த மார்ச் - 2020ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.3% ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 93.76% ஆக அதிகரித்துள்ளது. வழக்கம் போல், மாணவர்களை விட மாணவியர் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.       

இதையும் வாசிக்க:  அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பள்ளி வாரியான தேர்ச்சி விகிதம்:   

அதே போன்று, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 12,714 பள்ளிகளில், 4006 பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 886 ஆகும்.

பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள்85.25%
அரசு உதவிப் பெறும் பள்ளிகள்89.01%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்98.31%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்90.37%
பெண்கள் பள்ளிகள்93.80%
ஆண்கள் பள்ளிகள்79.33%

10ம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,21,994மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.07ஆகும்.

இதையும் வாசிக்க:  +2 தேர்வு முடிவு: மாவட்டங்களின் நிலையும் அதன் பின்னுள்ள சமூக குறியீடுகளும்  

கடந்த மார்ச் - 2020ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 95.2% ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 90.07% ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: 10th Exam Result, 12th Exam results