பள்ளிகள் திறப்பு அறிவிப்பு: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை..

அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

  • Share this:
தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் வரும் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க.. அரசு நீட் பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இரட்டிப்பு.. காரணம் என்ன?மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான கிருமி நாசினிகளை தயார் நிலையில் வைப்பது, அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published: