தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் வருகின்ற 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் வருகின்ற 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  மேல்நிலை வகுப்புகளுக்கு ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதம் பதினாறாம் தேதி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனோ தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது,
  விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்குவது நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

  மேலும் படிக்க... தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு? 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு குழப்பம் அளிக்கிறதா?

  அதேநேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: