Home /News /education /

நூலக செயலி, பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்... அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கம்

நூலக செயலி, பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்... அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கம்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின்  முயற்சிகளும் பெரிதாக இருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில், 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியினை அறிமுகப்படுத்தினார். மேலும், மாணவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.

    பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், " ஒவ்வொரு வாரத்திற்கும் வாரம் ஒருநாள் நூலகப் பாடவேளை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாராத்திற்கு ஒரு புத்தகம்  கட்டாயம் வாசிக்கத் தரப்படும். மாணவர்கள்  அந்த புத்தகத்தின் கருப்பொருளை வைத்து மாணவர்கள் ஓவியம் வரையலாம், கட்டுரை எழுதலாம், நாடகம் வடிக்கலாம். பள்ளிப் பாடத்தைத் தாண்டி புதிய உலகிற்கு மாணவர்களை கொண்டு செல்ல புத்தகங்கள் உதவும். மற்ற எழுத்தாளர்களின் படிப்புகளை மாணவர்கள்  உள்வாங்கி கொண்டு திறனாய்வு செய்யும் போது தான் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும்" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய அவர், "பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் வெல்பவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்வார்கள். இதில், தலைசிறந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகமாக நமது  அண்ணா நூற்றாண்டு நூலகம் திகழ்கிறது. எனவே, அதுபோன்ற ஒரு நூலகத்தில் மாணவர்களை அழைத்துச் செல்லும் போது, அவர்கள் மத்தியில் மனஉறுதி ஏற்படும்" என்று தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: கல்வி தொலைகாட்சியின் தலைமை செயலராக மணிகண்ட பூபதி நியமனம் நிறுத்தி வைப்பு - தகவல்

    நூலக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், " அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின்  முயற்சிகளும் பெரிதாக இருக்க வேண்டும். மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க  கலந்தாய்வு கொடுக்க வேண்டும் என்று பலர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், அனைத்தையும் விட நூலகமே மாணவர்களுக்கு மன வலிமையை அளிக்கும்.  மாணவர்கள் நூலகத்தில் உள்ள  புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று, தனிமையில் படித்து கருத்துக்களை உள்வாங்குவதை விட மிகப்பெரிய கவுன்சிலிங் இருப்பதாக தான் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi

    அடுத்த செய்தி