முகப்பு /செய்தி /கல்வி / 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

12ம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

காட்சிப்படம்

காட்சிப்படம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

2022- 23ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வில், மாநிலம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்பான முறையில் தேர்வெழுதி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ட்விட்டர் பதிவில்,  ‘தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3 வரை, 11ம் வகுப்புக்கு மார்ச் 14 தொடங்கி ஏப்ரல் 5 வரையிலும், 10ம் வகுப்புக்கு ஏப்ரல் 6 - 20 வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, "மாணவர்கள் எழுதவுள்ள பொதுத்தேர்வு அவர்களின் அறிவாற்றலை அளவிடும் கருவி அல்ல. பயிலும் திறனை அறிந்திடும் அளவுகோல் மட்டுமே; பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நாளை துவங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

முன்னதாக, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கஸ்டாலின் மாணவர்களுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில்,   ’பொதுத் தேர்வு குறித்து எந்த பயமும் வேண்டம். இது இன்னொரு பரீட்சை அவ்வளவு தான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும்.

எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருத்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை  எதிர் கொள்ளுங்கள்.  உங்களுக்குத் தேவையானது எல்லாம் நன்னம்பிக்கையும், உறுதியும் தான்" என்று தெரிவித்தார்.

First published:

Tags: Vijayakanth