Home /News /education /

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

11th result 2022: மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அரசின் பிரத்யேக இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

    Tamil Nadu 11th Exam Results Announced: 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதமாகும்.

    95.56 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம்  முதல் இடத்தையும், 95.44 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 95.25 தேர்ச்சி விகிதத்துடன் மதுரை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன

    தேர்வு முடிவுகளை

    www.tnresults.nic.in,

    www.dge1.tn.nic.in,

    www.dge2.tn.nic.in,

    www.dge.tn.gov.in

    ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். 

    மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து உள்நுழைந்து முடிவுகளை  பார்க்கலாம்.

    மேலும், தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கூடுதலாக, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கியது. 3119 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் தேர்வெழுதினர்.

    11ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவர்கள் 11ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Published by:Salanraj R
    First published:

    Tags: 11th Exam, Exam results

    அடுத்த செய்தி