முகப்பு /செய்தி /கல்வி / ஆசிரியர் தகுதித் தேர்வு காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

2022 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-II) இம்மாதம் 31ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12ம் தேதி வரை உள்ள தேதிகளில் நடத்தப்படுகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு அதே தேதியில் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வுகள் மே 6ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுளளது.

2022 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-II) இம்மாதம் 31ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12ம் தேதி வரை உள்ள தேதிகளில் நடத்தப்படுகிறது. கணினி வழியில் நடைபெறும் இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கான  தயாராகி வருகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலர்  திறந்தநிலை பல்கலைகழகத்தின் மூலம் மேற்படிப்பை படித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு தேர்வுகளும் நடப்பதால் ஏதேனும் ஒரு தேர்வை புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகியது.

இந்நிலையில், பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பருவத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துளளது.

First published:

Tags: School Teacher