ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா.. மத்திய அரசின் 2 துறைகள் முரண்பட்ட பதில் - அதிர்ச்சி தகவல்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா.. மத்திய அரசின் 2 துறைகள் முரண்பட்ட பதில் - அதிர்ச்சி தகவல்

நீட்

நீட்

NEET Exception bill: மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்திற்கு சில கேள்விகளை கேட்டு இருக்கிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

நீட் விலக்கு மசோதாவிற்கு தமிழக அரசு அனுமதி கேட்பது தேசிய இறையாண்மை, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானதா என்ற உள்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சகம் இல்லை என்றும், ஆயுஷ் அமைச்சகம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் பதிலளித்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

நீட் விலக்கு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது . 15 மாதங்களுக்கு மேலாகியும் இந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. , இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரின்ஸ் கஜேந்திர பாபு, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் கோரிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்திற்கு சில கேள்விகளை கேட்டு இருக்கிறது என்றும், அதற்கு அந்த துறைகள் வழங்கிய பதில்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி நீட் விலக்கு மசோதாவிற்கு தமிழகம் அனுமதி கேட்பது , நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு எதிரானதா என்ற ஒரு கேள்வியை உள்துறை அமைச்சகம் எழுப்பியதற்கு, சுகாதாரத் துறை அமைச்சகம், தமிழக அரசின் கோரிக்கை நாட்டின் ஒற்றுமைக்கு, இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று பதில் அளித்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றும் , அதே நேரத்தில் ஆயுஷ் அமைச்சகம் , மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக ஒரு மசோதாவை நிறைவேற்றுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் பதில் அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்க: ஜேஇஇ தேர்வு என்றால் என்ன? விண்ணப்பிக்கும் முறை விவரங்கள்!

மேலும் இரண்டு அமைச்சங்களும் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானது எனவும் அதற்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடு அமைந்திருப்பதாகவும் இரண்டு அமைச்சங்களும் கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நாடு முழுமைக்குமான ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது, அதனை விரும்பாத மாநிலங்கள் தங்களுக்கென்று தனியாக சட்டத்தை இயற்றிக் கொள்ள அரசியல் அமைப்பு சட்டம் அனுமதிக்கிறது என்பதால், இது குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் , அதனை நேரடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Education, Neet, Neet Exam