ஹோம் /நியூஸ் /கல்வி /

நீட் தேர்வில் தமிழ்நாடு சாதித்து வருகிறதா? தரவுகள் சொல்லும் உண்மை என்ன?

நீட் தேர்வில் தமிழ்நாடு சாதித்து வருகிறதா? தரவுகள் சொல்லும் உண்மை என்ன?

நீட் தேர்வு

நீட் தேர்வு

இந்தாண்டு தமிழகத்தில் மொத்த 1,32,167  பேர் நீட் தேர்வெழுதிய நிலையில், 4,600 பேர் 95 மதிப்பெண் விழுக்காடு மேல் பெற்றுள்ளனர் (Scoring 95th Per centile)

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான  நீட் நுழைவுத் தேர்வில், மாநிலத்தில் தேர்வெழுதிய 1,32,167 பேரில், 4,600 பேர் 95 மதிப்பெண் விழுக்காடு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை தேசிய சராசரியை விட மிகக் குறைவானதாகும்.

  2022 கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% தேர்ச்சி  பெற்றிருந்தனர். மாநிலத்தின் முந்தைய தேர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், இது குறைவானது ஆகும். மேலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 நபர்கள் கொண்ட பட்டியலில், தமிழகத்தில் இருந்து திரிதேவ் விநாயகா என்ற மாணவரும், எம். ஹரிிணி என்ற மாணவியும் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

  நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்ததால், நீட் தேர்வுக்கு குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்களும் எதிர்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் குறித்த சில முக்கிய தரவுகளை  தேசிய தேர்வு முகமையிடம் இருந்து 'இந்தியன் எஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் பெற்றுள்ளது.

  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு உள்ளது. அதாவது, மருத்துவ சேர்க்கைக்கான  தகுதியான நபர்கள் நீட் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த, தகுதியான நபர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதிகபட்ச மதிப்பெண் விழுக்காடு பெற்ற  மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை வழங்கப்படுகிறது. எனவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் விழுக்காடு பெற்றால் மட்டுமே மருத்துவ சேர்க்கை உறுதி செய்யப்படும்.

  அந்த வகையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் 95  மதிப்பெண் விழுக்காட்டுக்கு மேல் பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

  இதையும் வாசிக்க: நீட் தேர்வு முடிவுகள் 2022 : மாணவிகளின் தேர்ச்சி விகிதம் என்ன?

  இந்தாண்டு தமிழகத்தில் மொத்த 1,32,167  பேர் நீட் தேர்வெழுதிய நிலையில், 4,600 பேர் 95 மதிப்பெண் விழுக்காடு மேல் பெற்றுள்ளனர் (Students Scoring 95th Per centile). 95 மதிப்பெண் விழுக்காடு மாணவர்களின் எண்ணிக்கை 3.48 ஆகும்.  2019ல் 1,23,078 மாணவர்கள் நீட் தேர்வெழுதிய நிலையில், வெறும் 2,307 மாணவர்கள் மட்டுமே இந்த விழுக்காடு வரம்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

  தேர்வர்கள்95% விழுக்காடு பெற்ற மாணவர்கள்விகிதம்
  20191,23,0782,3071.87
  202099,6103,9513.96
  20211,08,3184,6094.25
  20221,32,1654,6003.48

  2020, 2021 என முந்தைய ஆண்டுகளுடன்  ஒப்பிடுகையில், இந்தாண்டு உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விகிதம் குறைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு முயற்சித்திருக்கின்றனர். அதன் காரணமாக, உயர் மதிப்பெண் விகிதம் குறைந்திருக்கலாம்.

  மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடு:  

  மாநிலம்  95% மதிப்பெண் விழுக்காடு விகிதம்                   (2019)  95% மதிப்பெண் விழுக்காடு விகிதம்                      (2022)
  தமிழ்நாடு1.873.48
  மஹாராஷ்டிரா3.023.01
  பிகார்6.345.89
  டெல்லி8.6310.02
  ராஜஸ்தான்10.811.25
  குஜராத்2.855.52
  உத்தர பிரதேசம்6.125.3
  மேற்கு வங்கம்5.856.72
  கேரளா6.324.25
  ஆந்திர பிரதேசம்7.425.39
  கர்நாடக2.453.72

  2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில், குஜராத் மாநிலத்தின் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. டெல்லி,ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்கள் தங்களது விகிதத்தை அதிகரித்துள்ளன. அதேசமயம், கேரளா, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.

  தரவுகள் என்ன சொல்லவில்லை:  தமிழகத்தில் 4600 மாணவர்கள் 95 மதிப்பெண் விழுக்காடு பெற்றுள்ளனர் என்று எடுத்துக் கொண்டாலும், இந்த தரவுகளை வைத்து தமிழகத்தின் நிலையை பொதுமைப்படுத்தவோ, ஒட்டுமொத்தப்படுத்தவோ முடியாது.

   இதையும் வாசிக்க: அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

  உதாரணமாக, மேற்படி எண்ணிக்கையில், சிபிஎஸ்இ அல்லாத மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன/  சாதி/வகுப்பு (ஓபிசி/எம்பிசி/எஸ்சி/எஸ்டி சிறுபான்மையினர்) ரீதியான விவரங்கள்/ இதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை/ முதல் தலைமுறை பட்டதாரி   மாணவர்களின் எண்ணிக்கை/ NEET REPEATERS மாணவர்களின் எண்ணிக்கை/ பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத மாணவர்களின் எண்ணிக்கை போன்ற முழு விவரங்கள் அடிப்படையில் தான் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய முடியும்.

  இதையும் வாசிக்கநீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன?

  உதாரணமாக, நீட் தேர்வு தொடர்பான பாதிப்புக்களை விசாரிப்பதற்கு நீதியரசர் ஏ கே ராஜன் குழுவும், இதே கருத்தை முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Neet, Neet Exam, NEET Result