முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறைவு... 35% மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி குறைவு... 35% மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்

JEE Exam 2023

JEE Exam 2023

கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம், இந்த முறை நீட் தேர்வில் 100 விழுக்காடு அளவிற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெரும் அளவில் தோல்வி அடைந்திருப்பது ஏற்கனவே வெளியான நிலையில் , தற்போது சரியான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன . தேர்வு எழுதிய 12,840 மாணவர்களில், 35 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றிருக்கிறார்கள் என்பது கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஏழாம் தேதி வெளியானது.  அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 17,972 பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். எனினும் இவர்களில் 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான தினத்தன்று, அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் தோல்வி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதி செய்திடும் வகையில், தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது

அதன்படி, தேர்வு எழுதிய மாணவர்களில் 35 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். 65 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை, 4ஆயிரத்து 447 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு, அரசு பள்ளி மாணவர்கள்  8,061 பேர் நீட் தேர்வு எழுதியதில், 1,957 பேர் தகுதி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 24% ஆகும்.

பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல், 25 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம், இந்த முறை நீட் தேர்வில் 100 விழுக்காடு அளவிற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 131 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 131 மாணவர்களுமே  தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதே போன்று, விருதுநகர் , நீலகிரி, சேலம் , பெரம்பலூர், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னை மாவட்டத்தில் தேர்வெழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கநீட் தேர்வு முடிவுகள் 2022 : மாணவிகளின் தேர்ச்சி விகிதம் என்ன?

தமிழக பள்ளிக்கல்வித்துறை நீட் பயிற்சி வகுப்புகளை பொறுத்தவரை நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு   தனியாக வகுப்புகளை நடத்தியது. அதேபோல ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வழக்கமான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஹைடெக் ஆய்வகங்கள் வழியாக நீட் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கநீட் தேர்வு முடிவுகள்: இந்த கட் ஆப் எடுத்தால் மருத்துவ இடங்கள் உறுதி

ஆனால், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது அளிக்கப்பட்ட நீட் பயிற்சி மாணவர்களுக்கு பெரிதாக உதவவில்லை என்பது தற்போதைய முடிவுகளின் படி தெரிய வந்துள்ளது.

First published:

Tags: Neet, Neet Exam, NEET Result