ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

மாற்று திறனாளிகளுக்கான இடங்கள் 212 ஒதுக்கப்பட்டாலும் 82 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். 40% ஊனம் இருப்பவர்கள் தான் மாற்று திறனாளிகள் கோட்டாவில் இடம் பெற முடியும்

மாற்று திறனாளிகளுக்கான இடங்கள் 212 ஒதுக்கப்பட்டாலும் 82 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். 40% ஊனம் இருப்பவர்கள் தான் மாற்று திறனாளிகள் கோட்டாவில் இடம் பெற முடியும்

மாற்று திறனாளிகளுக்கான இடங்கள் 212 ஒதுக்கப்பட்டாலும் 82 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். 40% ஊனம் இருப்பவர்கள் தான் மாற்று திறனாளிகள் கோட்டாவில் இடம் பெற முடியும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எம்பிபிஎஸ் , பி டி எஸ் ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோர் பங்கு கொள்ளும் சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது.

சிறப்பு பிரிவனருக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 229 எம்பி பி எஸ் இடங்களும், 2 பிடிஎஸ் இடங்களும் என 231 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

229 எம்பிபிஎஸ் இடங்களில், விளையாட்டு வீரர்களுக்கு  7 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு  10 இடங்கள் , மாற்றுத் திறனாளிகளுக்கு  212 இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிற்கு  2 இடங்கள் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு இடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு ஒரு இடம் உள்ளது.

இன்றைய கலந்தாய்வுக்கு மாற்று திறனாளிகளுக்கான 212 இடங்களுக்கு 82 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதில் 50 பேர்  மட்டுமே தகுதி பெற்றவர்கள். விளையாட்டு வீரர்களுக்கான எட்டு இடங்களுக்கு 216 பேர் தகுதியானவர்கள். முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் 11 இடங்களுக்கு 356 பேர் தகுதியானவர்கள்.

இன்று ஒதுக்கப்படும் இடங்களுக்கு மாலை மருத்துவத்துறை அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார்.

இதனிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு செய்தியாளர்களை சந்தித்த போது, "இன்று 231 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று மாலை அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். நாளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையும் வாசிக்க: ஆசிரியர் பட்டய படிப்புத் தேர்வில் 10% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை

மாற்று திறனாளிகளுக்கான இடங்கள் 212 ஒதுக்கப்பட்டாலும் 82 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். 40% குறைபாடு இருப்பவர்கள் தான் மாற்று திறனாளிகள் கோட்டாவில் இடம் பெற முடியும். உடலின் மேற் பகுதி சீராக இருக்க வேண்டும். கைகள், மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிகள்:

தஞ்சாவூர் ஒரத்தநாடு, புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழிசை. அவருக்கு கால்கள் சீராக இல்லாவிட்டலும் அதை பொருட்படுத்தாமல் நன்றாக படித்து பிளஸ் முடித்து நீட் தேர்வில் 461 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சிபி எஸ் இ பள்ளியில் படித்த அவர் மாற்று திறனாளிகள் பிரிவில் முதல் ரேங்க் பெற்றுள்ளார். அவரது தந்தை விவசாயி. அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி என்கிறார்.

புதுக்கோட்டை கீழநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவதாரணி தான் குள்ளமாக இருப்பது படிப்பதற்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை என்கிறார். முதல் முறை நீட் எழுதி தேர்ச்சி பெற்று, மருத்துவம் பயில தகுதி பெற்றுள்ளார். அவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவரை மிகவும் ஊக்கப்படுத்தி வளர்த்ததாகவும், கண்டிப்பாக நன்றாக படித்து தன் மகள் மருத்துவராக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்ததாகவும் அவரது தாய் அமுதா கூறுகிறார்.

Published by:Vijay R
First published:

Tags: Neet, Neet Exam, NEET Result