மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

அமைச்சர் விஜய பாஸ்கர் (கோப்பு படம்)

கடந்த 2-ம் தேதியே தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பட்டியல் வெளியாகவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் 7 -ம் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது.

இந்த ஆண்டுதான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் விண்ணப்பம் வெளியிடப்பட்டது. 53, 176 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி, தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அஸ்வின் குமார் என்ற மாணவரும், மூன்றாம் இடத்தை இளமதி என்ற மாணவியும் பிடித்துள்ளனர்

8-ம் தேதி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் நிலையில் 9-ம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2-ம் தேதியே தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பட்டியல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...  ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து ரூ.40 ஆயிரத்தை இழந்த கல்லூரி மாணாவி





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published: