ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளும் 10ம் தேதி திறக்கப்படும்- இயக்குனரகம் அறிவிப்பு

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளும் 10ம் தேதி திறக்கப்படும்- இயக்குனரகம் அறிவிப்பு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் வருகின்ற பத்தாம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  தமிழ்நாட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி  திறக்கப்பட வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

  தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும்  காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி  பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  முன்னதாக, கடந்த செப்டம்பர்  மாதம் 30ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்தது. இதனையடுத்து, அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

  இதற்கிடையே, கடந்த கோடை விடுமுறை நாட்களின் போது, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்கு ஈடுசெய்யும் பணி விடுப்பு வழங்குமாறு வந்த தொடர்  கோரிக்கையினை அடுத்தும், வரும் அக்டோபர்  10,11,12 ஆகிய நாட்களில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சிகள் நடத்த இருப்பதாலும், பள்ளி மற்றும் தொடக்கக் கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13 அன்று பள்ளிகள் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

  இதையும் வாசிக்க: அரசு பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

  இந்நிலையில், அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் பெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், " மெட்ரிகுலேசன் பள்ளிகளும் காலாண்டுத் தேர்வு முடிந்து 10.10.2022  அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்" என்று  தெரிவிக்கப்பட்டது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Department of School Education, Holidays