• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசு ITI நேரடி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

அரசு ITI நேரடி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு


ITI நேரடி மாணவர் சேர்க்கை

ITI நேரடி மாணவர் சேர்க்கை

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சியில் சேர வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 30.10.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் சென்னை மாவட்டத்தின் கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், வடசென்னை, ஆர்.கே.நகர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து சென்னை, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    2021 –ஆம் ஆண்டிற்கு கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான Desk Top Publishing Operator, Plastic Processing operator , food production general , Front office Assistent , physiotherapy , techician , smartphone technician cum app tester ஆகிய தொழில் பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சியில் சேர வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 30.10.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிப்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 30.10.2021 வரை பயிற்சியில் சேரலாம்.

    கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்று சேரும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிகணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750ஃ- மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ்,; முன்னனி நிறுவனங்களில் ஃ நட்சத்திர ஹோட்டல்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

    மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற் பயிற்சி நிலைய தொலைபேசி எண்களை 044-29813781, 9499055649 தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா முனைவர்.ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

    இவ்விதம் சென்னை, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: