11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் பட்டியல், பழங்குடியின மாணவர்கள் (SC/ST Studentws) மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு (Post Matric Scholarship) விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்களிடமிருந்து (கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும்) புதிய (fresh) மற்றும் புதுப்பித்தல் (renewal) இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2022-23ஆம் கல்வியாண்டில் இருந்து கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இணையவழியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று மற்றும் சாதி உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும்,மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க ஏதுவாக அவர்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் மூலம் அக்கல்லூரியின் பற்று அலுவலர் (Nodal officer) முன்னிலையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: மாணவர் பெயரில் ரூ.75,000 வைப்பு நிதி.. கல்விக்கு கைகொடுக்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
மேலும், இந்த இணையதளத்தில், விண்ணப்பம் பதிவிடும் நடைமுறை குறித்த குறும் படம் மற்றும் மாவட்ட அளவில் உதவி பெற அணுக வேண்டிய அலுவலர்கள் குறித்த விவரமும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே மாணவர் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scholarship