Home /News /education /

மாணவர்கள் 5 முறை தவறை உணர்ந்து கொள்ள வாய்ப்பு.. அதையும் மீறினால் - பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

மாணவர்கள் 5 முறை தவறை உணர்ந்து கொள்ள வாய்ப்பு.. அதையும் மீறினால் - பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஒரு குழந்தை பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர் மாற்றித்துத்தர வேண்டும்.

  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தவறான செயல்களில் ஈடுபட்டால் குறைந்தது ஐந்து முறை தவறை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், 10.05.2022 அன்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பபு ஆணையத் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாதந்திர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்வையில் வைத்துள்ளார்.  மேலும், இந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  10.05.2022 அன்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பபு ஆணையத் தலைவர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு;

  ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லையென்றால் முதலில் சரியான குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றலில் குறைபாடிருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால் தலைமையாசிரியர் District Early intervention Center (Special Education) அணுகி குழந்தைக்கு உதவி செய்யலாம். கற்றலில் குறையாடில்லாத குழந்தை என்றால் பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்கு தேவையான முறையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்

  ஒரு குழந்தை பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர் மாற்றித் தர வேண்டும்

  குழந்தைகள் பெரும்பாலும் செய்யும் தவறுகள் பின்வருமாறு:- 

  பொது போக்குவாத்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தல்/பொதுஇடங்களில் இடையூறு ஏற்படுத்ததல்;

  மற்ற குழத்தைகளை அடித்தல் / பகடிவதை சாக்கில் செய்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்படுத்துதல்,மது அருத்துதல்;

  ஆசிரியர்களை உடல்ரீதியாக காயப்படுத்துதல்/அச்சுறுத்துதல்/அவமதித்தல்;

  பள்ளிக்கு இரு சக்கர வானத்தை ஒட்டி வருதல்;

  வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல்;

  சாதி மதம் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற குழத்தைகள், பணியாளர்களை பாகுபாடு பண்படுத்துதல்;

  உருவகேலி செய்தல்;

  பள்ளிசுவர்களில் தவறான வார்த்தை / படங்களை எழுததல்/தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல்.

  ஏதேனும் குழத்றை மேற்கூறிய செயல்களில் ஈடுபட்டால் பள்வி ஆலோசகர் முதலில் தக்க ஆலேசனைகள் வழங்க வேண்டும். மேலும், இதே குழந்தை 2 மற்றும் 3 வது முறையாக தவறு செய்தால் பின்வருமாறு ஒழுக்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.

  • ஐந்து திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும்;

  • இரண்டு நீதிக்கதைகளை பெற்றோர்களிடமிருந்து கற்று வகுப்பறையில் சொல்ல வேண்டும்;

  • ஐந்து செய்தி துணுக்குகனை சோரித்து வருப்பறையில் ஒரு வாரத்திற்கு படித்து காட்ட வேண்டும்;

  • வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்திற்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்;

  • ஐந்து வரலாற்று தலைவர்களைப் பற்றி அறிந்துகொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

  • சிறந்த ஆளுமைகளின் உண்மை கதைகளை  கற்றுக் மொண்டு வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்க வேண்டும்;

  • நல்ல பழக்கவழக்கங்களை பற்றிய வரைபடம் (சாட்) எழுதுதல்;

  • பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுததல்;

  • சிறிய காய், கணி தோட்டம் பள்ளியில் அமைத்தல்;

  • ஏதேனும் பிடித்த பாடத்தை பற்றிய வரைபடம்  எழுதுதல்;

  • பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வைத்து கைவினைப் பொருட்களை செய்தல்;


  குழந்தைக்கு தனது தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து ஏன் இந்த தவறை செய்தார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்ட செய்தல்.

  இதையும் வாசிக்க:  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு- மதிப்பெண்களில் திருப்தி இல்லையா? மறுகூட்டலுக்கு விண்ணப்பியுங்கள்

  மூன்றாவது எச்சரிக்கையிலும் குழந்தை தனது தவறை உணரவில்லை என்றால், 4 வது நிகழ்வில் அருகில் இருக்கும் காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அதிகாரி (CWPO) மூலம் குழந்தைக்கு அறிவுரை ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

  குழந்தை  5வது முறையாக தவறாக நடந்துகொண்டால் சுற்றுச்சூழலின் மாற்றமும் நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும் என்பதால் குழந்தையை அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம். (பள்ளி நிர்வாகக் குழு ஒப்புதலோடு)

  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட மேற்காணும்  தீர்மானத்தின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தனது கடிதத்தில் தெரிவித்தார்.
  Published by:Salanraj R
  First published:

  Tags: Department of School Education, Education

  அடுத்த செய்தி