ஹோம் /நியூஸ் /கல்வி /

லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்த சான்றிதழ் படிப்புக்கான கட்டணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்க உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Certificate Program in Applied Journalismதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து 6 மாத கால இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பினை வழங்க உள்ளது.

லயோலா கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கட்டணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்க உள்ளது. வெளியூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயணச்செலவை மாணவர்கள் ஏற்க வேண்டும்.

காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தியரி வகுப்புகளும் பிற்பகல் முதல் மாலை 5 மணி வரை - தனித்திறன் செயல்பாடுகள், பயிற்சிகள், வாசிப்பு, படம்பிடித்தல் போன்ற செய்முறை வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது.

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேர முடியும். 6 மாத கால பயிற்சி படிப்பாக இது கற்பிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: தமிழக கல்வித் துறையில் ரூ.2,05,700 சம்பளத்தில் வேலை... இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..TNPSC அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகமும் லயோலா கல்லூரியும் இணைந்து இந்த ஊடகவியல் படிப்புக்கான சான்றிதழை வழங்குகின்றன. ஆன்லைனில் இந்த பயிற்சிக்காக முன் பதிவு செய்ய வேண்டிய முகவரி  https://live.loyolacollege.edu/loyolavocationaleduonline/application/loginManager/youLogin.jsp

இச்சான்றிதழ் படிப்பிற்கு இம்மாதம் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Published by:Salanraj R
First published:

Tags: Loyola College