12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் வழிமுறைகள் - மத்திய அரசிடம் வழங்கிய தமிழக அரசு

பள்ளி மாணவிகள்

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துக்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் நாடு முழுவதும் உச்ச கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யலாமா அல்லது முக்கிய பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வினை நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

  இந்தநிலையில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்து
  நேற்று முன்தினம் மத்திய அரசு அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய கூடாது என்றும் தற்போதைய நடைமுறையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

  இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் கருத்துக்களை அறிக்கையாக அனுப்பி வைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில் மத்திய அரசுக்கு தனது கருத்துக்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கொரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: