எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு ரெடி.. பெற்றோரே நீங்க தயாராகுங்க...

பள்ளி மாணவர்கள் (CRS PHOTO / Shutterstock.com)

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15-ம் முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் திறப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது. இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசும், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துவருகிறது.

  இந்தநிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  அதன்படி,   • செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.மேற்படி உயர்வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
  இதையும் படிங்க:  தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் என்ன? 

  இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து, எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வாக்கில் திறக்க அரசு முடிவெடுக்கும் சூழலில், பெற்றோர்களும், குழந்தைகளை தயார்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
  Published by:Karthick S
  First published: