குறைவான மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி 1,848 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டம்!

தனியார் பள்ளிக்கு நிதி அளித்து விட்டு, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் விட்டதே பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Web Desk | news18
Updated: July 4, 2019, 8:45 AM IST
குறைவான மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி 1,848 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டம்!
கோப்பு படம்
Web Desk | news18
Updated: July 4, 2019, 8:45 AM IST
10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 1, 848 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை கூறி வருகிறது. ஆனால், என்ன முயற்சி செய்தும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை. பெரும்பாலான பெற்றோருக்கு அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.

எதனால் அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைகிறது என்று பார்த்தால் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, போதுமான உபகரணங்கள் இல்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.


மேலும், ஒரு அரசு பள்ளி இருக்கும் இடத்திற்கு மிக அருகாமையிலேயே அதிக வசதிகளுடன் பல தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனாலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைகிறது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அரசு பள்ளி


இப்படி பட்ட சூழலில் தான், தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும். அவற்றை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

மேலும், அண்மையில் நீலகிரியில் 3 தொடக்கப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி என மொத்தம் 6 பள்ளிகள் மூடும் நடவடிக்கையினை அந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது சர்ச்சையினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை இணைக்கும் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப் பள்ளி


மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவான பள்ளியில் இருந்து மாணவர்களை மாற்ற, அருகாமையில் உள்ள பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.l

இதனிடையே, தனியார் பள்ளிக்கு நிதி அளித்து விட்டு, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் விட்டதே பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணம் என்று குற்றம்சாட்டும் கல்வியாளர்கள். மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க... விவசாயியின் உயிரை பறித்த கடன்: சாகும் முன் வீடியோ 

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...