Home /News /education /

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

முதற்கட்டமாக 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்த இருக்கிறது. இதற்காக,ரூ.33.56 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    மாநிலத்தில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

    கடந்த 7.5.2022 அன்று தமிநாடு சட்டப்பேரவையில்  முதலமைசச்சர் மு.க ஸ்டாலின்," 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

    இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும்.  1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி  நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு  இன்று ஆணையிட்டுள்ளது.

    மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி,

    காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும்.

    நகரப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.

    ஊரக பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.

    காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப் பொருட்கள் (Extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க: TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

    உள்ளூரில் சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தபட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

    உணவு சமைக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.

    காய்கறிகளின் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்தப்பட வேண்டும்.

    தயார் செய்யப்பட்ட உணவினை குழந்தைகளுக்கு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு உணவினை ருசி பார்த்தல் வேண்டும்.

    உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.

    உணவு தயாரிக்கப்படும் இடத்தை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உணவு தயாரிக்கப்பட வேண்டும்.

    உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடும் சமையகர் மற்றும் உதவியாளர்கள் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும்.

    உணவு வகைகள்: 



    அதன்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் வழங்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது இரண்டு நாட்களிலாவது, இயன்ற அளவு அந்தந்தப் பகுதிகளில் விளையும்/கிடைக்கும் சிறுதானியங்களின் அடிப்படையிலான சிற்றுண்டியினைத் வழங்கப்படவேண்டும்.

    இவ்வாறு, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கபபட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Children, Govt School

    அடுத்த செய்தி