அரசு கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இரு தினங்களே உள்ளன

மாதிரி படம்

அரசுக் கலை அறிவியியல் கல்லூரியில் சேர 1.20 லட்சம் இடங்களுக்கு இதுவரை 2.80 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பிக்க வரும்  10 ந் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2021-22 ம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு 10-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22 ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26 ந் தேதி முதல் ஆகஸ்ட் 10 ந் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 1.20 லட்சம் இடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு சுமார் 2.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நாளையும், நாளை மறுநாளும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published: