தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தமிழக அரசு, ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதி வரையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டபோது, பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விரும்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாலும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் சிக்கினார்
அதன்படி, ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே கல்வி பயில்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் துத்தநாகம் மாத்திரைகளை வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளை திறக்கும் நாளில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.