Home /News /education /

செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவு

செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவு

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது. இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசும், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துவருகிறது. இந்தநிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் என்ன? 

    அதன்படி,

    செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர்வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

    அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள், தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    • அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Lockdown, Students, Tamil Nadu

    அடுத்த செய்தி