Home /News /education /

எண்ணும் எழுத்தும்... மனதை மகிழ்ச்சியால் நிறைக்கும் வைரல் வீடியோ

எண்ணும் எழுத்தும்... மனதை மகிழ்ச்சியால் நிறைக்கும் வைரல் வீடியோ

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும்

இத்திட்டத்திற்காக சிறப்பு பாடப் பயிற்சி நூல்கள், வழிகாட்டு நெறிமுறைகள், எண்ணும் எழுத்தும் செயலிபரத்தியோக காணொளிகள்  தயாரிக்கப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில் ஏற்பட்டும் கற்றல்  இழப்புகளை குறைக்கவும், குழந்தைகளின் கற்றல் ஆற்றலை அதிகப்படுத்தவும் 'எண்ணும் எழுத்தும்' என்ற  முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1,2,3 ஆகிய வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    வழக்கமான கற்றல் நடைமுறைகளைத் தாண்டி, ஆடல், பாடல், நடித்து காட்டுதல், கதை சொல்லுதல் போன்ற  புதிய உத்திகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக சிறப்பு பாடப் பயிற்சி நூல்கள், வழிகாட்டு நெறிமுறைகள், எண்ணும் எழுத்தும் செயலி, பரத்தியோக காணொளிகள்  தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துக்கள் மிகச் சிறப்பான வகையில் ஒலித்தும், வாசித்தும் வரும் வீடியோ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 



    அந்த காணொளியில், அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் வார்த்தையில் உள்ள எழுத்துக்களை தனித்தனியாக வாசித்து, அதிலுள்ள பெய்யெழுத்துக்களை மட்டும் சரியாக சொல்கின்ற்னர். இந்த காணொளியை, இந்திய காவல் அதிகாரி ஆர். ஸ்டாலின் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு, " எண்ணும் எழுத்தும்... தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" என்று மகிழ்ச்சித் தெரிவித்தார். இந்த காணொளிக்கு ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இதையும் வாசிக்கஅன்புள்ள சத்யா மிஸ்சுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... மாணவி எழுதிய பாச கடிதத்தை பகிர்ந்த பள்ளிக்கல்வி துறை

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம்:

    2025ம் ஆண்டுக்குள்  உள்ள எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்; 2025ம் ஆண்டுக்குள்  உள்ள எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin, Department of School Education, Govt School

    அடுத்த செய்தி