Home /News /education /

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய மூன்று பாடநெறிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிஇ.,பிடெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

    தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23 வரை முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்களுக்கு சிறப்பு  கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 25ம் தேதி  அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த பொறியியல் கலந்தாய்வு  சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.www.tndte.gov.in  (அல்லது)  www.tneaonline.org  என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.

    தரவரிசைப் பட்டியல்:

    தரவரிசைப் பட்டியல் 200 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இதில்,கணித பாடநெறிக்கு 100 மதிப்பெண்களும், இயற்பியல், வேதியியல் பாடநெறிகளுக்கு தலா 50 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இம்மூன்று பாடநெறிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது

    பொறியியல் மாணவர் சேர்க்கை: 

    மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான சேர்க்கை ஒற்றை சாளரை முறையாக 2022 பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA 2022) நடத்தப்படுகிறது.

    இதையும் வாசிக்க:  1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது... தமிழக பள்ளிக்கல்வித் துறை

    2022-23 கல்வியாண்டில், பொறியியல் பட்டயப் படிப்பிற்கு ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2.10 லட்சமாக உள்ளன. இதில் 1.95 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ளன. இதில், 55-60% இடங்கள் (கிட்டத்தட்ட 90,000 இடங்கள்) அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட இடங்களும், இதர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, Engineering counselling

    அடுத்த செய்தி