Home /News /education /

பொறியியல் கலந்தாய்வு: மாணவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

பொறியியல் கலந்தாய்வு: மாணவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

கணிதம், இயற்பியல், வேதியியல் என ஒவ்வொரு பாடங்களிலும் தமிழ்நாடு கல்வி வாரியத்தில் படித்த மாணவர் பெற்ற உச்ச மதிப்பெண் அடிப்படையில் இதர வாரியத்தில் படித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நிர்ணயிக்கப்படும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    பி.இ., பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடந்துகிறது. முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு) மாணவர்களுக்கு 23ம் தேதி வரை  நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25ம் தேதி அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தரவரிசைப் பட்டியல் என்றால் என்ன? 

    மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான பொது மாணவர் சேர்க்கையை  (Common Admission ) தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்துகிறது.

    பொது மாணவர் சேர்க்கை என்பதால் (Common Admission) பல்வேறு அரசு துறைகள் (மாநில கல்வி வாரியம், சிபிஎஸ்இ), அரசுசாராத் துறைகள் ஐசிஎஸ்இ) என பல்வேறு கல்வி வாரியங்களில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

    கணிதம், இயற்பியல், வேதியியல் என ஒவ்வொரு பாடங்களிலும் தமிழ்நாடு கல்வி வாரியத்தில் படித்த மாணவர் பெற்ற உச்ச மதிப்பெண் அடிப்படையில் இதர வாரியத்தில் படித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நிர்ணயிக்கப்படும்.

    உதாரணமாக, தமிழ்நாடு கல்வி வாரியத்தில் படித்த மாணவர் ஒருவர் அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், சிபிஎஸ்இ வாரியத்தால் அதிகபட்சமாக 90 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது, இந்த இரண்டு வாரியத்திற்கு அதிகபட்ச மதிப்பெண் 100 என்று எடுத்துக் கொள்ளப்படும். இதன் அடிப்படையில், சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப்பெண் விழுக்காடு நிர்ணயிக்கப்படும் (Normalisation of Marks).

    உதாரணமாக, மேற்கண்ட சூழலில் சிபிஎஸ்இ இயற்பியல் பாடப்பிரிவில் 60 மதிப்பெண்கள் 66.66 மதிப்பெண்ணாக மாற்றியமைக்கப்படும்.

    (60/90) ∗ 100 = 66.66%

    இந்த நடைமுறையின் கீழ், அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய பொது தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    TNEA என்றால் என்ன?

    TAMIL NADU ENGINEERING ADMISSION - 2022 என்ற இணைய செயல்முறையின் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு,  முன்பெல்லாம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கொள்ள எழுத நீண்ட தூரத்துக்குப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. இதுதவிர, தங்குமிட வசதி, உணவு உள்ளிட்ட செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். 

    கொரோனா பெருந்தொற்று காலத்தில், பொறியியல் மாணவர் சேர்க்கையை  ஒட்டுமொத்தமாக ஆன்லைன்  முறை மூலமாக நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து, இந்தாண்டும் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை ஆன்லைன்  மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

    கலந்தாய்வு செயல்முறைகள்? 

    கலந்தாய்வு நான்கு சுற்றுகளில் நடைபெறும்.

    விருப்பப் பட்டியல் நிரப்புதல் (Choice Filling)

    பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்தல் (Allotment)

    ஒதுக்கீட்டை உறுதி செய்தல் (Confirmation)

    சேர்க்கையை உறுதி செய்தல் (Admission)

     விருப்பப் பட்டியல் நிரப்புதல் (Choice Filling) : 

    விண்ணப்பதாரர்கள், தரவரிசைப் பட்டியலில் பிடித்த இடங்கள் அடிப்படையில் கலந்தாய்விற்கு      அழைக்கப்படுவார்கள். முதலில், விண்ணப்பதாரர்கள் விருப்பப் பட்டியல் நிரப்ப வேண்டும். தங்கள் விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி ( preferences) நிரப்ப வேண்டும்.



    எத்தனை கல்லூரிகளையும் நீங்கள் சமர்ப்பிக்கலாம். ஆனால், விருப்பங்களை வரிசைப்படியாக சமர்ப்பியுங்கள். உதாரணமாக, உங்களது முதலாவது விருப்பம் அண்ணா பல்கலைக்கழகமாக இருந்தால், அதை முதலில் நிரப்புங்கள். இந்த விருப்ப பட்டியலை நிரப்புவதற்கு மட்டும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

    பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்தல்:  தரவரிசையின் படிசமர்ப்பித்த விருப்பப் பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இரண்டு நாட்களுக்குள் இந்த ஒதுகீட்டை உறுதி செய்ய வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி இடங்களை உறுதி செய்யலாலாம். 

    1.  Accept and Join  - ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவு திருப்திகரமாக இருந்தால், ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்தி அக்கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள். 

    2. Accept and Upward: ஒதுக்கப்பட்ட இடம் திருப்திகரமாக இருந்தாலும், நீங்கள் தேர்வு செய்த வேறு இருப்ப இடங்களுக்கு காத்திருக்கலாம். 

    உதாரணமாக, ஒரு மாணவருக்கு அவர் தேர்வு செய்த 5வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் 1, 2,3,4 ஆகிய இடங்களுக்கு காத்திருக்கலாம். ஒரு வேளை மேல் நோக்கிய நகர்வில் மேற்கண்ட விருப்ப வரிசை இடங்கள் கிடைக்காதபட்சத்தில், அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 5வது இடத்திற்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு வழங்கப்படும்.

    ஒரு வேளை அந்த மாணவர்களுக்கு 5வது இடத்தை விட சிறந்த தேர்வு கிடைக்கும்பட்சத்தில், கிடைத்த விருப்ப கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.



     

    3.Decline and Upward: ஒதுக்கப்பட்ட கல்லூரியை நிராகரித்து, மேல் நோக்கிய நகர்விற்கு காத்திருக்கலாம். மேல் நோக்கிய நகர்தலில் விருப்பமான இடத்தை பெற இயலாவிட்டால் அடுத்த கலந்தாய்வு சுற்றில் கலந்து கொள்ள வேண்டும்.

    4. Decline and Move to Next Roundமாணாவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட இடம் திருப்திகரமாக  இல்லையெனில், மேல் நோக்கிய நகர்தலுக்கு காத்திருக்காமல், அடுத்த சுற்றில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

    5. Decline and Quit:  மாணவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருப்தி அடையாமல்  இருந்தால், அதனைத் தொடர்ந்து வரும் சுற்றுகளிலும்  கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காமல் கலந்தாய்விலிருந்து வெளியேறலாம்.
    Published by:Salanraj R
    First published:

    அடுத்த செய்தி