ஹோம் /நியூஸ் /கல்வி /

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் எப்போது தொடங்கும்? அமைச்சர் பொன்முடி பதில்

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் எப்போது தொடங்கும்? அமைச்சர் பொன்முடி பதில்

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi | மாணவர்கள் பலனடையும் விதமாகவே நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கு என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , 2022-23 கல்வியாண்டிற்கான பிஇ., பிடெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் மிகவும் தாமதாக வெளியிடப்பட்டதால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும், மாணவர்கள் பலனடையும் விதமாகவே நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

  கடந்தாண்டு, இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட வில்லை என்றும், இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளிலும் கூட ஏகப்பட்ட இடங்கள் காலியாக இருந்தன என்றும், தற்போது அந்த நிலை ஏற்படவில்லை. அண்ணா உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "பெற்றோர் மற்றும்  மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

  இதையும் வாசிக்க:    பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு: தனியார் கல்லூரிகளை அதிகளவு தேர்ந்தெடுத்த மாணவர்கள்

  வரும், அக்டோபர்  13ம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும், அம்மாத மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். நிதி வசதி, கல்லூரியை அடைவதற்கான வசதி போன்ற பல்வேறு காரணிகளை மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்கின்றனர். இந்த கல்லூரியைத்  தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்க முடியாது. தனியார் கல்வி நிறுவனங்களிலும் கூட ஏகப்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க7.5% இட ஒதுக்கீடு; மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75% முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி

  பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பதிலளித்தார்.   

  Published by:Salanraj R
  First published:

  Tags: College Admission, Minister Ponmudi