Home /News /education /

பொறியியல் படிப்பிற்கான பொதுக்கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

பொறியியல் படிப்பிற்கான பொதுக்கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

2022-23 கல்வியாண்டிற்கான B.E/B.TECH பொறியியல் படிப்பிற்கான பொதுக்கலந்தாய்வு ஆகஸ்ட் 26ம் முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பொறியியல் பட்டப் படிப்பிற்கான பொது கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ம் முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

    2022-23 கல்வியாண்டிற்கான B.E/B.TECH பொறியியல் படிப்பிற்கான பொதுக்கலந்தாய்வு ஆகஸ்ட் 26ம் முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில்,  மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவர காலதாமதமானது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு தான் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு பொது கலந்தாய்வு நடைபெறும் என்றும், கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கடந்த 24ம் தேதி அறிவித்தது.

    இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள்  தொடர்பான முக்கிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. அதில், உத்தேச விடைக் குறிப்பு ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகும் என்றும், செப்டம்பர் மாதம் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.

    இதையும் வாசிக்க நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்

    செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால், 10ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைசச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தயாளர்களிடம் பேசிய அவர், "  பொதுப்பிரிவு கலந்தஆய்வு  செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.        
    Published by:Salanraj R
    First published:

    Tags: Engineering counselling

    அடுத்த செய்தி