Home /News /education /

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாதிரி படம்

மாதிரி படம்

B.Arch பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான தேசியக்  கட்டடக்கலைத் திறனாய்வு தேர்வு  முடிவுகள் வெளிவராத நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    2022-23 கல்வியாண்டிற்கான பொறியியல் (B.E/B.Tech) பட்டப்படிப்பிற்கான விண்ணப்ப சேர்க்கை இன்றுடன் முடிவடைகிறது.எனவே, மாணவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    மாநிலத்தில், கடந்த 28.06.2022 முதல் பொறியியல் மற்றும் கட்டடக்கலை (B.E/B.Tech/B.Arch) பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணைய தள வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.  சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சுமார்  2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 1,49,369  பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், 1,62,492 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. 

    முன்னதாக, இதற்கான கால அவகாசம் 19.7.2022 என்று அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்நிலையில், சிபிஎஸ்இ  12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், TNEA-ன் கால அவகாசம் சிபிஎஸ்இ  12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து ஐந்து நாட்கள் வளர நீடிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த 22ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 92.71 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் அறிவித்ததில் இருந்து இன்றுடன் ஐந்து நாட்கள் முடிவடைவதால், 2022 - 2023 கல்வியாண்டிற்கான B.E/B.Tech விண்ணப்ப சேர்க்கை இன்றுடன் முடிவடைகிறது.  B.Arch பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான தேசியக்  கட்டடக்கலைத் திறனாய்வு தேர்வு  முடிவுகள் வெளிவராத நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க:  குரூப்-4 தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

    தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் பெறப்படுகின்றன. இன்றைக்குள் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்த மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் சான்றிதழ் பதவிவேற்றம் செய்ய கூடுதல் இரண்டு  நாள் அவகாசம் வழங்கப்படும். பணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விரைவில் பதிவேற்றம் செய்யுமாறு TNEA கேட்டுக் கொண்டுள்ளது. 

    இதையும் வாசிக்க:   பொறியியல் படிப்புகளின் மீது மீண்டும் ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

    விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, Engineering

    அடுத்த செய்தி