கொரோனா பெருந்தொற்று மூடல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டன. இது மாணவர்களின் கல்வியில் பெரும் தடையை ஏற்படுத்தியது. ஊரடங்கு காலத்திலும் அதற்கு பின்பும் ஆன்லைன் மூலமாக கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கு பாடச்சுமையைக் குறைக்கும் வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு
பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை திருத்தியமைத்தது.
அதன்படி, 11, 12ம் வகுப்புகளில் 60-65% பாடங்கள் மட்டுமே முக்கிய அம்சங்களாக (prioritised Syllabus) எடுத்துக் கொள்ளப்பட்டு, 40-35 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. நடந்து முடிந்த 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்விலும் முக்கிய அம்சங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று, இதர வகுப்புகளைப் பொறுத்த வரை, தோராயமாக 50% பாடங்கள் முக்கிய அம்சங்களாக இதர பாடங்கள் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், உருமாறிய ஓமிக்ரான் ஏற்படுத்திய மூன்றாவது அலை பாதிப்புகள் குறைந்ததையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.
2022-23 கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் வாசிக்க: இந்துக்களின் உணர்வுகள் புண்படுகிறது : மறைந்த தலித் கவிஞர் சித்தலிங்கையாவின் பாடலை நீக்கிய கர்நாடக அரசு
இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய பாடத்திட்டமே தொடரும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அனைத்து கருத்துக்களையும் மாணவர்கலுக்கு விளக்கி கூறுமாறு, பள்ளிகளின் தலைவர்கள், ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.