கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின், படிக்கும் முறையை மேம்படுத்துவதில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாகவும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு வாரத்திற்கும் வாரம் ஒருநாள் நூலகப் பாடவேளை இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
4 முதல் 5-ம் வகுப்பு வரை | ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கடைசி அமர்வு நூலக செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுளள்னது |
6 முதல் 10ம் வகுப்பு வரை | ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நான்காவது அமர்வு நூலக செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. |
11ம் வகுப்பு | ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ஏழாவது அமர்வு நூலக செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. |
12ம் வகுப்பு | ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஏழாவது அமர்வு நூலக செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. |
ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இளம் வாசகர்கள் வட்டத்தினை உருவாக்கலாம்.
பள்ளிக்கு அருகாமையிலுள்ள குழந்தை எழுத்தாளர்கள், கதை சொல்லிகள் போன்றோரை நூலகம் சார்ந்த செயல்பாடுகளுக்கென அழைக்கலாம்.
பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் புத்தக நன்கொடையை ஊக்குவிக்கலாம்.
வாசகர் வட்ட உறுப்பினர்களைக் கொண்டு பாட வேளைகள் தவிர பிற நேரங்களில் நூலகத்தை சுழற்சி முறையில் நிர்வகிக்கச் செய்யலாம்.
நூலகப் பாட வேளையில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்கத் தர வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்தில், தாங்கள் எடுத்துச் சென்ற புத்தகம் குறித்து ஓவியம் வரையவோ, கட்டுரை எழுதவோ, கதைச் சுருக்கம் செய்யவோ, திறனாய்வு செய்யவோ, நூல் அறிமுகம் செய்யவோ வேறு எந்தவிதமான சொந்த படைப்பாகவோ இருக்குமாறு ஓவ்வொரு மாணவனையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
அவ்வாறு வகுப்பு முழுவதும் மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து மூன்று சிறந்த படைப்புதனை அவ்வாரத்திற்கான சிறந்த படைப்பாக அறிவித்து உற்சாகப்படுத்தலாம். இதுபோக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு வாரமும் நூலகப் பாட வேளையில் மேற்குறிப்பிட்டவாறே செய்ய வேண்டும். வகுப்பு வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
மாநில அளவில் வெற்றி பெறும் முதல் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கும், அடுத்த 25 மாணவர்கள் இந்தியாவிலுள்ள தேசிய நூலகங்களுக்கு 'அறிவுப் பயணம்' அழைத்துச் செல்லப்படுவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education