முகப்பு /செய்தி /கல்வி / சட்டப் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சட்டப் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சட்டப் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

TNDALU Admission 2022 : 5 ஆண்டு சட்டபடிப்புகளான B.A.L.L.B (Hons.) Degree Hourse , B.B.A (Hons.) Degree Hourse , B.COM (Hons.) Degree Hourse , , B.C.A (Hons.) Degree Hourse, ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்க இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே ஆரம்ப தேதி. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 29/07/2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, 10 அரசு சட்ட கல்லுாரிகளிலும், ஒரு தனியார் சட்ட கல்லுாரியிலும், இளநிலை சட்டப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றில் B.A.L.L.B (Hons.) Degree Hourse , B.B.A (Hons.) Degree Hourse , B.COM (Hons.) Degree Hourse , , B.C.A (Hons.) Degree Hourse, ஆகிய ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளும், L.L.B, என்ற மூன்றாண்டு படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகின்றது. இதில் 5 ஆண்டு சட்டபடிப்புகளான B.A.L.L.B (Hons.) Degree Hourse , B.B.A (Hons.) Degree Hourse , B.COM (Hons.) Degree Hourse , , B.C.A (Hons.) Degree Hourse, ஆகியவற்றிக்கு மட்டும் விண்ணப்பிக்க இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஹானர்ஸ் அல்லாத L.L.B, என்ற, மூன்றாண்டு படிப்புகளும் , L.L.B, என்ற இரண்டு ஆண்டு படிப்புகளும் சேருவதற்கான அட்மிஷன் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே ஆரம்ப தேதி. இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை 29க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, 10 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்ட கல்லுாரியில், உரிய கட்டணம் செலுத்தி பெறலாம். நேரில் விண்ணப்பம் பெற்று, அதை அஞ்சல் வழியில் அனுப்பலாம்.மேலும், 'ஆன்லைன்' வழியிலும், விண்ணப்பிக்கலாம். அதற்கான வசதிகள், அம்பேத்கர் பல்கலையின் http://tndalu.ac.in என்ற, இணையதளத்தில் உள்ளன.

இதற்கான அறிவிப்பு http://tndalu.ac.in/pdf/2022/july/Notification_for_5_Years_Integrated_Law_Courses2021-2022.pdf  இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

First published:

Tags: Education