Home /News /education /

எம்.இ.,எம்.டெக். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.இ.,எம்.டெக். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணைய தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்/முடியும்.

  • Last Updated :
    தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

    2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம். இ., எம்.டெக்.,போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும், எம்.அர்ச்., முதுநிலை படிப்புக்குமான தமிழ்நாடு பொது நுழைவு சேர்க்கை (TANCA) நடத்தப்படுகிறது.

    2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    முக்கியமான நாட்கள்:

    இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய:

    ஆரம்ப நாள்‌ : 03.07.2022

    இறுதி நாள்‌ : 03.08.2022

    https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணைய தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்/முடியும்.

    தகுதிகள்: 

    2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET)  பெற்ற மதிப்பெண்கள்.

    (அல்லது)

    2020/21/22 ஆகிய ஆண்டுகளில்  தொடர்புடைய பொறியியல்/தொழில்நுட்ப துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள்

    கேட் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்


    (அல்லது)

    2020/21/22 ஆகிய ஆண்டுகளில்  தொடர்புடைய பொறியியல்/ வாழ்க்கை அறிவியல் துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் மற்றும் 2022 டான்செட் தேர்வு மதிப்பெண்கள்

    அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்திற்கான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

    இணைய வழியில் நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.    

    இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ் நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழக துறைகளுக்கு விண்ணப்பிக்க - The Director (Admissions),
    Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கும்

    அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க  The Principal,
    Government College of Technology,
    Thadagam Road,
    Coimbatore – 641013. என்ற முகவரிக்கும்

    அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, College Admission

    அடுத்த செய்தி