Home /News /education /

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பை பிரதிபலிக்கும் தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பை பிரதிபலிக்கும் தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பை பிரதிபலிக்கும் தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பை பிரதிபலிக்கும் தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

New Education Policy | தமிழகத்தில் பெரும்பான்மையான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திட வரவேற்பு தெரிவிக்கவில்லை.

தமிழகத்தைச்சேர்ந்த 653கல்லூரிகள், 11பல்கலைக்கழகங்கள் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திட பல்கலைக்கழக மானியக் குழு  (University Grants Commission) கோரிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லை. புதிய கல்விக் கொள்கை சார்ந்து உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்களை அனுப்பிட ஏப்ரல் 30ந் தேதி கடைசி தேதியாகும்.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் கல்வி முறையை மாற்றி வடிவமைப்பதற்காக நாடு முழுவதும் பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உள்ள  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிடமிருந்து பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதிலும் இருந்து இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு கோரிய தகவல்களை அனுப்பாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் 22 அரசு பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள் இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக கோரிய தகவல்களை அனுப்ப வில்லை. அதேபோல 653 அரசு மற்றும்  அரசு உதவிப்பெறும் மற்றும்  தனியார் கல்லூரிகள் விவரங்களை அனுப்பவில்லை. இதன் மூலம் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை கல்வி நிறுவனங்கள் விபரங்களை அனுப்பவில்லை என இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Also Read : மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கக்கூடாது: பிரதமர் மோடி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விவரங்களை பெறுவதன் மூலம் குறிப்பிட்ட கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்கழகங்களில்  நடத்தப்படும் பாடப்பிரிவுகள் கல்வி நிறுவனத்தின்  தனிச் சிறப்பு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள இந்த விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளது. இந்த நிலையில் இதுவரை விபரங்களை சமர்ப்பிக்காத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதும் 1050 பல்கலைக்கழகங்களில் 427 பல்கலைக்கழகங்களும் 47 ஆயிரம் கல்லூரிகளில் 12394 கல்லூரிகள் இதுவரை விவரங்களை சமர்ப்பிக்க வில்லை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

 
Published by:Vijay R
First published:

Tags: New Education Policy

அடுத்த செய்தி