Home /News /education /

பட்டங்களோடு உங்கள் படிப்பு முடிவதில்லை.. - மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

பட்டங்களோடு உங்கள் படிப்பு முடிவதில்லை.. - மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

பட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமில்லை; பட்டத்துடன் உங்கள் படிப்பு முடிந்து விடுவதில்லை - மு.க ஸ்டாலின்

பட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமில்லை; பட்டத்துடன் உங்கள் படிப்பு முடிந்து விடுவதில்லை - மு.க ஸ்டாலின்

பட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமில்லை; பட்டத்துடன் உங்கள் படிப்பு முடிந்து விடுவதில்லை - மு.க ஸ்டாலின்

    அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ ஒன்றிய  கல்வி அமைச்சகம் வெளியிட்ட  NIRF தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக் கூடிய நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. உயர்கல்வியில் இத்தகைய மேன்மை பொருந்திய தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமரை உங்கள் அனைவரின் சார்பில் நான் அன்புடன் வரவேற்கிறேன் .

    கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளுடனும் இங்கு அமர்ந்திருக்கக்  கூடிய மாணவ/மாணவிகள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் கற்றலில் தலைசிறந்து விளங்குகிறது.

    அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசானது, கல்விக் கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

    Also Read: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

    மேலும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர், "  பட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புக்காக  மட்டுமல்ல; பட்டத்துடன் உங்கள் படிப்பு முடிந்து விடுவதில்லை. அறிவாற்றலை மேம்படுத்துங்கள். உங்கள் பட்டமளிப்பு விழாவுக்கு  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டிருக்கிறார். இது, உங்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய பெருமை. எனது, பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமரே வந்திருந்தார் என்று உங்கள் எதிர்கால பிள்ளைச் செல்வங்களுடன் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்திற்குள் நுழைகிறீர்கள். " என்று ஸ்டாலின் தெரிவித்தார்
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, MK Stalin

    அடுத்த செய்தி