ஹோம் /நியூஸ் /கல்வி /

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு : ஆணை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு : ஆணை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை முதலமைச்சர் இன்று  வழங்கினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகள் மற்றும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தினை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை முதலமைச்சர் இன்று  வழங்கினார். இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2,72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு. தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

First published: