ஹோம் /நியூஸ் /கல்வி /

நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்.. சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்.. சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நம்ம ஸ்கூல் துவக்க விழா

நம்ம ஸ்கூல் துவக்க விழா

Namma School Foundation scheme: நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தின் தூதுவராக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் இலச்சினையை அறிமுகம் செய்து வைத்து, இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக கல்வி துறையில் மாற்றங்களை ஏற்படுத்திய க.அன்பழகனின் பிறந்த நாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அனைத்தையும் அரசால் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர், நாம் உயர்வதற்கு காரணமாக இருந்த பள்ளியை நாம் உயர்த்துவதற்காக தான் இந்த திட்டம் தொடங்கப்படுவதாகவும் கூறினார்.

இதையும் வாசிக்க: LAMP Fellowship: நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்ற விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

உள்ளூர் மக்கள், முன்னாள் மாணவர்கள், தொழில் துறையினருடன் தமிழக கல்வி வளர்ச்சிக்காக கைகோர்க்க விரும்புவதாகக் கூறிய முதலமைச்சர், இத்திட்டத்திற்காக கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தின் தூதுவராக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், தனது சொந்த நிதியிலிருந்து திட்டத்திற்கு  ரூ.5 லட்ச ரூபாய் வழங்கினார்.

First published:

Tags: CM MK Stalin, Education, School education department