அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் புதியதாக அறிவிக்கப்பட்ட 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், உயர்கல்வித் துரையின் சார்பில் 152.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டங்களையும் துவங்கி வைத்தார்.
2021-22ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும் விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் - தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர், திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், தருமபுரி மாவட்டம் - எரியூர், புதுக்கோட்டை மாவட்டம்- ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் - சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் வாசிக்க:
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆகஸ்ட் 25 முதல் கணினி வழியில் தாள்- I நடைபெறும் - முழு விவரம்
அதேபோன்று. 2022-23ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி, புதுக்கோட்டை மாவட்டம் - திருமயம், ஈரோடு மாவட்டம் - அந்தியூர், கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் – வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் வாசிக்க: 10,371 ஆசிரியர்கள் நியமனம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்
அதன்படி, புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகம், அதிகாரிகளுக்கான குடியிருப்பு கட்டிடங்கள், வகுப்பறைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட உயர்க்கல்வி துறையின் கட்டிடங்களை துவங்கி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.