12th Exam Board Exam Schedule: 2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
10.00 a.m. To 10.10 a.m | Reading the question paper | ||
10.10 a.m to 10.15 a.m | Verification of Particulars by the Candidate | ||
10.15 a.m to 1.15 p.m | Duration of the Examination | ||
DATE | DAY | SUBJECT | |
13.03.2023 | MONDAY | Part -I | LANGUAGE |
15.03.2023 | WEDNESDAY | Part -II | ENGLISH |
17.03.2023 | FRIDAY | Part -III | COMMUNICATIVE ENGLISH ETHICS AND INDIAN CULTURE COMPUTER SCIENCE COMPUTER APPLICATIONS BIO-CHEMISTRYADVANCED LANGUAGE(TAMIL) HOME SCIENCEPOLITICAL SCIENCE STATISTICSNURSING VOCATIONALBASIC ELECTRICAL ENGINEERING |
21.03.2023 | TUESDAY | Part -III | PHYSICS ECONOMICSCOMPUTER TECHNOLOGY |
27.03.2023 | MONDAY | Part -III | MATHEMATICS ZOOLOGY COMMERCE MICRO BIOLOGYNUTRITION AND DIETETICS TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT AGRICULTURAL SCIENCENURSING (General) |
31.03.2023 | FRIDAY | Part -III | BIOLOGY BOTANY HISTORYBUSINESS MATHEMATICS AND STATISTICS BASIC ELECTRONICS ENGINEERINGBASIC CIVIL ENGINEERINGBASIC AUTOMOBILE ENGINEERING BASIC MECHANICAL ENGINEERING TEXTILE TECHNOLOGYOFFICE MANAGEMENT AND SECRETARYSHIP |
03.04.2023 | MONDAY | Part -III | CHEMISTRY ACCOUNTANCYGEOGRAPHY |
தேர்வு அட்டவணை:
மார்ச் 13 - தமிழ் மொழித் தேர்வு
மார்ச் 15 - ஆங்கில மொழித் தேர்வு
மார்ச் 17 - கணினி அறிவியல்
மார்ச் 21 - இயற்பியல்
மார்ச் 27 - கணிதம்
மார்ச் 31 - உயிரியல்
ஏப்ரல் 3 - வேதியியல்
இந்த (2023ம்) ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை. அதற்கேற்ப, பாடங்களும் நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே, தீபாவளி அடுத்த நாள் விடுமுறை மற்றும் தொடர் மழை விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் சனிக்கிழமைகளில் பணிநாளாக நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக அறிவித்திருந்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் 2022 - 2023-ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிட உள்ளதை முன்னிட்டு வாழ்த்துகள் பெற்றுக்கொண்டேன். pic.twitter.com/78el7yLQed
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 7, 2022
மேலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் நீட் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: ஊராட்சி பள்ளிகளுக்கு ரூ.1,050 கோடியில் 7,200 கூடுதல் புதிய வகுப்பறைகள் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11,மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது.
எனவே, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், இந்த அட்டவணையின் படி தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, 12th Exam results