ஹோம் /நியூஸ் /கல்வி /

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - முழு விவரம்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - முழு விவரம்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

Class 11th HSLC Exam Time Table Schedule announced: 11ம் வகுப்புக்கான பொது  தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2022- 23 கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

  அதன்படி, 11ம் வகுப்புக்கான பொது  தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறுகிறது.

  இந்த (2023ம்) ஆண்டுக்கான பாடத்திட்டத்தில்  பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை. அதற்கேற்ப, பாடங்களும் நடத்தப்பட்டுவருகிறது.  தீபாவளி அடுத்த நாள் விடுமுறை மற்றும் தொடர் மழை  விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் சனிக்கிழமைகளில் பணிநாளாக நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக அறிவித்திருந்தார்.

  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  10.00 a.m. To 10.10 a.mReading the question paper
  10.10 a.m to 10.15 a.mVerification of Particulars by the Candidate
  10.15 a.m to 1.15 p.mDuration of the Examination
  DATEDAYSUBJECT
  14.03.2023TUESDAYPart -ILANGUAGE
  16.03.2023THURSDAYPart -IIENGLISH
   20.03.2023 MONDAY Part -IIIPHYSICS ECONOMICSCOMPUTER TECHNOLOGY EMPLOYABILITY SKILLS
      24.03.2023    FRIDAY    Part -IIIBIOLOGY BOTANY HISTORYBUSINESS MATHEMATICS AND STATISTICS BASIC ELECTRONICS ENGINEERINGBASIC CIVIL ENGINEERINGBASIC AUTOMOBILE ENGINEERING BASIC MECHANICAL ENGINEERING TEXTILE TECHNOLOGYOFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
   28.03.2023 TUESDAY Part -IIICHEMISTRY ACCOUNTANCY GEOGRAPHY
      30.03.2023    THURSDAY    Part -IIICOMMUNICATIVE ENGLISH ETHICS AND INDIAN CULTURE COMPUTER SCIENCE COMPUTER APPLICATIONS BIO-CHEMISTRYADVANCED LANGUAGE(TAMIL) HOME SCIENCEPOLITICAL SCIENCE STATISTICSNURSING VOCATIONALBASIC ELECTRICAL ENGINEERING
      05.04.2023    WEDNESDAY    Part -IIIMATHEMATICS ZOOLOGY COMMERCE MICRO BIOLOGYNUTRITION AND DIETETICS TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT AGRICULTURAL SCIENCENURSING (General)

  மேலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி  முதல் தொடங்குகிறது .ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள்  நீட் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் வாசிக்கமழைநாள் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

  முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11,மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது.

  எனவே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், இந்த அட்டவணையின் படி தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: 10th Exam, 10th Exam Result, 12th exam, 12th Exam results